"ஒத்துக்க...!"

"என்ன உன் கூட்டாளியா நினைச்சி சொல்லுப்பா.. அடிக்கடி விந்து வெளியாவுதா? பொண்ணுங்கலாம் கனவுல வருதா?"

ராஜா மௌனமாக இருந்தான்.

"ஆமாதானே...ம்ம்ம்..சரி.. இதுலாம் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல.. உன் வயசுல எல்லாரும் அப்டிதான்.. நீ கூட்டத்துல போயி நில்லு" என்று ராஜாவிற்கு சமாதானம் சொல்லிவிட்டு, சிறு புன்னகையோடு ராயன் வீட்டிற்குள் நுழைந்தார்.

ராஜாவிற்கு 15 வயதுதான் ஆகிறது, அரும்பு மீசைகள் தன்னை ஆண்மகன் என வெளிக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் ஒரு இளம்பிராயம். அவன் உடலில் ஏற்பட்ட இயற்கை மாற்றங்களை அவன் தாயார் சரியாகப் புரிந்துக் கொள்ளாததனால் இன்று அவனை அங்கு இழுத்து வரவேண்டிய சூழ்நிலை.

அப்பொழுது நடுநிசி மணி 12.30 இருக்கும். கூட்டத்தில் போய் நின்றவாறு தன்னைச் சுற்றி ஒருமுறைப் பார்த்துக் கொண்டான். அவனைச் சுற்றி சுமார் 30 பெண்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் கல்யாணமானப் பெண்களே அதிகம் என்பதை ஒருவாறு அறிந்துக் கொண்டவன் தலையைத் தொங்கப் போட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

"என்ன கொடுமடா இது..! எனக்கு நேரமே சரியில்லையே.." என்று மனதில் தன் இயலாமையை நினைத்து நொந்துக் கொண்டான் ராஜா.

"என் அந்தரங்கத்த இன்னிக்கு சபைல வெச்சி அம்பலபடுத்திருவான் போலே இருக்கே..! பேசாமே இங்கிருந்து நழுவிருவோமா.. என் அம்மா வேற என்னையே பாத்துகிட்டு இருக்காங்கலே" என்று கலவரத்தோடு இருந்த சமயம் பூசையும் தொடங்கியது.



வீட்டிற்குள் சென்ற ராயன், சாமியார் உடையில் கையில் சாட்டையுடன் வெளிவந்து கருப்பண்ணச்சாமி சன்னதியில் வந்து அமர்ந்தார்.

உருமி மேளம் இசைக்கப்பட்டது, ராயன் உடல் ஒரு குலுங்கு குலுங்கி "டேய்ய்ய்ய்ய்ய்..! நான்தான்டா சடா முனி வந்துருக்கேன்..!" என்று கத்தியதும் உருமி மேளம் நிறுத்தப்பட்டது, ராஜாவின் ஈரக் குலை நடுங்க ஆரம்பித்துவிட்டது.

"கூட்டிவா அந்த பாலகனே...!!" என்று ராஜாவைக் கைக்காட்டி அழைக்க, ராஜா பவ்யமாக சடா முனியை வணங்கி அவர் முன் வந்து அமர்ந்தான்.

"ம்ம்ம்.. என்னடா பாலகனே, உன் சித்தம் தடுமாறுது... அதுனாலே என்ன தேடி வந்திருக்கே...ம்ம்.. கவலபடாதே நான் இருக்கேன்லே, உனக்கு ஒரு குறையும் இல்ல..."

ராஜாவின் மனதில் பாலை வார்த்ததுபோல் இருந்தது..

"அப்பாடா, எனக்கு ஒருகுறையும் இல்லையாம்.. சீக்கிரம் விட்டுட்டா வீட்டுக்கு ஓடிருவேன்.." என்று மனதில் நினைத்துக் கொண்டே சடா முனியின் அவதாரம் கொண்டிருக்கும் ராயனை வெறித்துப் பார்த்தான்.

ராயன் சுருட்டை ஆழமாக ஒரு இழு இழுத்துவிட்டு ராஜாவை தன் அருகே இழுத்தார். சுருட்டுப் புகையை அவன் உடல் முழுதும் ஊதி படர விட்டார்.

"அம்மா.. இங்க வா... " ராஜாவின் தாயாரை அருகில் அமரச் சைகை காட்டினார்.

"உன் மவன் அடிக்கடி தனிமைல உக்காந்து யோசிப்பானா, சொந்தமா சிரிச்சிக்குவானா..?

ஆம் என்பதற்கு அறிகுறியாக ராஜாவின் அம்மா தலையாட்டினார்.

"உன் மவன் சொப்பனத்துலே நிறைய பொண்ணுங்கலே பாக்குறாம்மா.. அவன் உடம்புல கன்னி புகுந்திருக்கு... அவன் விந்து வீணடிக்கப்படுது..! உண்மையா இல்லியா...!" என்று ராஜாவைப் பார்த்துக் கேட்டார் ராயன்.

ராஜாவிற்கு ஆம் என்று தலையாட்டுவதா இல்லை என்று தலையாட்டுவதா என்று குழம்பிப் போய் ஏதோ தலையை ஆட்டி வைத்தான்.

ராயன் தொடர்ந்தார்,

"ம்ம்.. நான் கொடுக்கும் இந்த எழுமிச்சம்பழத்தாலே இவன மூணு நாளைக்கு காலை மாலை குளிப்பாட்டிவிடு.. அதுக்கப்புறம் மறுபடியும் என் சன்னதிக்கு அவன கூட்டிட்டு வந்து என்ன வணங்கிட்டு போகச் சொல்லு.." என்று ராஜாவின் தாயாரைப் பார்த்துக் கூறினார்.

ராஜாவின் தாயார் ராஜாவை ஒருமாதிரியாக் பார்க்க ராஜாவிற்கு அவமானமாகிவிட்டது. ஒரு பக்கம் அழுகை வருவதுபோல் இருந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டிருந்தான். சடா முனி சொல்வதைக் கேட்டுக் கொண்ட ராஜாவின் தாயார்,

"நீங்க சொன்ன மாரியே செய்றேன் சாமி.." என்று கூறிவிட்டு எழுந்தார்.

"பாலகனே என்னுடைய திருநீறு இருக்குற வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது... புரியுதாடா...! என்று அதட்டும் குரலில் கேட்டார் சடா முனி.

ராஜா தலையை மட்டும் ஆட்டிவிட்டு கையில் திருநீற்றைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து எழுந்தான். அங்கிருந்தவர்கள் அனைவரும் ராஜாவை ஒரு மாதிரிப் பார்த்தனர்.

"சே... என் மானத்த இப்டி வாங்கிட்டானே, இனிமே நான் என் அம்மா மூஞ்சிலே எப்டி முழிப்பேன்.. " என்று மனதில் புலம்பியவாறே தொங்கப் போட்டத் தலையை ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிரிந்து பார்த்தான்.

அவன் எதிரில்,ஈரமான மஞ்சள் உடைகளில் அவன் வகுப்புத் தோழிகள் மாலினி, காயத்ரி, ஷோபனா அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

(அச்சமயம் அவன் வெட்கித் தலைக் குனிந்திருப்பானா, இல்லை ஈர உடைகளில் அங்கலாவண்யங்களை வெளிக்காட்டிக் கொண்டிருந்த அந்த மூன்று கிளிகளின் உடலை கணக்கெடுத்திருப்பானா, நமக்குத் தெரியாது...)

5 பேரு வெத்தல போட வந்தாங்க..:

யூர்கன் க்ருகியர் said...

எக்ஸ்பிரஸ் வேகத்துல படிச்சிகிட்டே வந்து கதைய முடிச்சா,கடைசி பக்கம் காணமல் போன நாவலை படிச்சா மாதிரி இருதது.
சும்மா சொல்லக்கூடாது சார்! பட்டைய கெளப்பிட்டிங்க!

சித்தன் said...

இப்பதான் ஏதோ கதை எழுத கத்துகிட்டு இருக்கேன் சார், முடிஞ்ச அளவு கதைகளுக்கு மெருகு ஊட்ட முயற்சி செய்றேன்.. ஊக்கம் கொடுத்ததுக்கு நன்றி...

அமர பாரதி said...

கதையோட நாட் உங்களுக்கு பிடிபட்டு விட்டது. இன்னும் கொஞ்சம் சிச்சுவேஷனையும் அதன் விவரனையையும் சேர்த்தால் அருமையான கதை சொல்லி ஆகி விடுவீர்கள்.

ILA (a) இளா said...

nalla vegam.. nalla kadahiayamaippu

சித்தன் said...

ஆலோசனைக்கு நன்றி அமர பாரதி, முயற்சிக்கிறேன்..

கருத்துக்கு நன்றி இளா..

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates