ஏக்கம்


வெகுநாளாகவே "அல்ட்ரமேன்"படம் போட்ட பென்சில் பெட்டி முகுந்தனின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. எப்பாடு பட்டாவது நண்பன் திவாகர் வைத்திருக்கும் அதேப்போன்ற பென்சில் பெட்டியை வாங்கிவிட வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தான் அவன்.

முகுந்தன் அவன் அம்மாவிடம் கேட்டால், விலைமலிவான பென்சில் பெட்டியைத்தான் வாங்கித் தருகிறார். தினமும் அம்மா கொடுக்கும் 20 காசை எப்பொழுது சேர்த்து வைத்து 10 ரிங்கிட் பென்சில் பெட்டியை அவன் வாங்குவது? ம்ம்.. இப்போதைக்கு 5 ரிங்கிட் மட்டும்தான் அவன் சேமிப்பில் உள்ளது. ஏக்கம் அவனை வாட்டியது.

"டேய்.. ரமேசு, செவிடா! உளுந்தும், கோதுமையும் ரெண்டு கிலோ கட்டி வை..! கஸ்டமர் எவ்ளோ நேரம் வேய்ட் பண்றாங்க.. ஒழுங்கா வேலையப் பாரு..!" என்று வேலையாளை திட்டிக் கொண்டே மளிகைக் கடைக்காரர் கந்தசாமி கல்லா பெட்டியின் முன் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தார்.

"அண்ணே, 5 வெள்ளிக்கி சில்லரைக் கிடைக்குமானே.."

நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த கந்தசாமி நிமிர்ந்தார். எதிரே ஒரு சிறுவன்.

"5 வெள்ளிக்கு சில்லரையா, சரி குடு.."

கந்தசாமி சில்லரை மாற்றிக் கொண்டிருந்தவேளை, மேசையின் மீது அடுக்கி வைக்கப்படிருந்த பண நோட்டுகளில் ஒரு பண நோட்டை சடீரென்று உருவிக் கொண்டு ஓடினான் அந்தச் சிறுவன். வாடிக்கையாளர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மூச்சிரைக்க திரும்பிப் பாராமல் சந்து பொந்துகளில் ஓடி மறைந்தான் அச்சிறுவன்.

அவனை விரட்டிப் பிடிக்க முயன்ற ரமேஸ் "அண்ணே, அவனே பிடிக்க முடியலே, சந்துக்குள்ளே ஓடி மறைஞ்சிட்டான்!" என மூச்சிரைத்துக் கொண்டே வந்துக் கூறினான்.

கந்தசாமி சிரித்தார்.

"அந்த மடையன் 5 வெள்ளியைக் கொடுத்துட்டு, மேசைல இருந்த 1 வெள்ளியே உருவிட்டு ஓடிட்டான்.. நமக்கு நாலு வெள்ளி லாபம்"

கடையில் கலகலவென சிரிப்பொலிகள் கேட்டன.

0 பேரு வெத்தல போட வந்தாங்க..:

Post a Comment

தமிழ்ல சொல்லணுமா, இங்க தட்டுங்க.. தமிழ் தட்டசுவான், வந்து வெத்தல போட்டதுக்கு நன்றி.. :)

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates