நடுநிசி நாய்கள்..



அந்த தோட்டப்புறத்தில் ஒரு தூங்குமூஞ்சி மரம், அதன் கீழ் வேலை வெட்டி இல்லாத ஐந்து இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். கிழிந்த கால் சட்டைகளை அணிந்து கொண்டு தலையில் கோழி கறிப்பானையை கவிழ்த்து விட்டதுபோல் பரட்டைத் தலை முடியுடன் காணப்பட்ட அவர்கள், சீட்டு விளையாடிக் கொண்டே அருகில் உள்ள செம்மண் சாலையை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். எதையோ எதிர்ப்பார்பவர்கள்போல் காணப்பட்ட அவ்வைந்து இளைஞர்களும் இப்படி பேசிக்கொண்டார்கள்.

"மச்சான் வர வர தொல்ல ரொம்ப தாங்கலடா... ஒரு நாளு போட போறேன், பாத்துகிட்டே இரு..!"


" ரிலேக் மச்சான், நீ இப்டி சொல்ற, நேத்து என் சரக்கு மார்கெட்டுக்கு போயிருக்கு, பின்னாடியே வந்து வம்புக்கு இழுத்தா மண்டைக்கு ஏறாது, சரக்கு திரும்பி பாத்து ஒரு மொற மொறச்சிருக்கு, இடத்த காலி பண்ணிருச்சிங்க...."

இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே இரு பங்களாதேஷ்கார வாலிபர்கள் அப்பக்கமாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர். மரத்தடி வாலிபர்கள் ஒரு முறை முறைக்க, அவர்கள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு நடந்தார்கள். திடீரென்று இரு வெறிநாய்கள் பங்களாதேஷ்காரர்களைப் பார்த்து குரைத்ததும் விரு விருவென்று நடையைக் கட்டினார்கள்.

அண்மைய காலமாகவே அத்தோட்டத்தில் அந்நியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்து வந்தது. அதனால் பல இந்திய இளைஞர்களின் வேலைகள் குறைந்த வருமானத்திற்கு வேலை செய்யும் அந்நிய நாட்டவர்களின் கைகளுக்கு கைமாறி வந்தது. அதோடு மட்டுமல்லாமல் அத்தோட்டத்தில் உள்ள நிறைய இந்திய பெண்கள் அந்நியர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவம், அங்குள்ளவர்களை கிரங்கடித்திருந்தது.
அங்கலாய்க்கும் தொனியில் பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீண்டும் மந்திராலோசனையில் ஐக்கியப்பட்டார்கள்.

"மச்சான், இன்னொரு கத தெரியுமா, ஏரியாவுட்டு ஏரிய வந்து நம்ம பிள்ளைங்கலதான் குறி வெச்சி வம்பிளுக்குதுங்க... இன்னிக்கு முடிச்சுருவோமா..?"

என்று சொல்லிக் கொண்டே அந்த பங்களாதேஷ் வாலிபர்கள் போன பாதையை நோக்கி ஒரு திருட்டுப் பார்வை பார்த்தார்கள். அவர்கள் தலை தொலைவில் மறைந்ததும், மச்சான் இனிமே எங்கிருந்தோ வந்து வாலாட்டும் இதுங்கல சும்ம விட்டு வெச்ச, அப்புறம் நம்ம ஏரியா சரக்குங்களுக்குதான் ஆபத்து.. முடிச்சிருவோமா?"

ஐவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

நள்ளிரவு 1 மணியிருக்கும், அந்த நடு நிசியில் தோட்டபுறமே மயான அமைதியில் உறங்கிக் கொண்டிருக்கையில், நாய்கள் ஓலம் விடும் சப்தம் கேட்ட சிறிது நேரத்தில் "கல்.....!!!" என்ற சத்தத்தோடு அந்த இரவு மீண்டும் ஒரு மயான அமைதியை போர்த்திக் கொண்டு உறக்கம் கொண்டது.

இத்தனை நாட்களாக தோட்டபுறத்தில் அனைவரையும் கடித்து வந்த வெறிநாய்கள் அன்றிரவே குளோஸ்..!

என்னைப் பற்றி..

My photo
அதான் தெரியிலிங்க..தேடிகிட்டு இருக்கேன்,கண்டுபுடிச்சேனா கண்டிப்பா சொல்றேன் நான் யாருன்னு..

இப்ப மணி..

பதிவெண்


Template Brought by :

blogger templates